
ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ குறித்த தகவல்
செய்தி முன்னோட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் 'ஜெயிலர்'.
இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, பிரியங்கா மோகன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்று படக்குழு கூறியுள்ளது.
முத்துவேல் பாண்டியன் என்னும் ஜெயிலர் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி இதில் நடித்துள்ளார்.
அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ நாளை(ஜூலை.,3) மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பர்ஸ்ட் சிங்கிளுக்கான ப்ரோமோ ரெடி
First Single ready. Announcement Promo Ready. Promo ku Promo-um ready 😉
— Sun Pictures (@sunpictures) July 2, 2023
⁰#JailerFirstSingle Update Tomorrow at 6pm.⁰@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @Mohanlal @NimmaShivanna @bindasbhidu @tamannaahspeaks @meramyakrishnan @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/EVaLlrp4XK