
கலைஞர் கருணாநிதி குடும்பத்திலிருந்து நடிக்க வரும் மற்றொரு வாரிசு!
செய்தி முன்னோட்டம்
கலைஞர் கருணாநிதி திரைத்துறையில் தான் முதலில் நுழைந்தார். அவரது எழுத்துக்களால் மக்கள் மனதில் இடம் பெற்ற பின்னர் அவர் மெல்ல அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் அரசியலில் அசைக்கமுடியாத ஆளுமை ஆனது வரலாறு. அவரது வழியில் அவரது வாரிசுகள் பலரும்- மு.க. முத்து தொடங்கி, ஸ்டாலின், உதயநிதி, துரை அழகிரி, அருள்நிதி என பலரும் திரைத்துறையில் நுழைந்தனர். இதில் சன் நிறுவனத்தின் மாறன் சகோதரர்களும் அடங்குவர். இவர்கள் பின்னர் அரசியலில் நுழைய இந்த திரைத்துறை அவர்களுக்கு ஒரு படியாக மாற்றி கொண்டனர். அந்த வகையில் தற்போதைய துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி ஏற்கனவே ரெட் ஜெயண்ட் மூவிஸ் பொறுப்புகளை ஏற்று கொண்டதாக செய்திகள் வெளியானது.
நடிப்பு
நடிகர் அவதாரம் எடுக்கிறாரா இன்பநிதி?
அறிக்கையின்படி, இன்பன் வெறுமனே விநியோகஸ்தராகவும், பேனரின் முகமாகவும் மாறவில்லை, ஆனால் Red Giant நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பொறுப்பேற்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் வலைப்பேச்சு வெளியிட்ட செய்தியின்படி அவர் நடிகராக அவதாரம் எடுக்கவுள்ளார். அவரை இயக்கப்போவது மாரி செல்வராஜ். அவர் உதயநிதியின் கடைசி படமான 'மாமன்னன்' என்ற படத்தை இயக்கி இருந்தார். இது வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல பெயர் பெற்றதால், அவரே இன்பநிதியை இயக்கட்டும் என உதயநிதி டிக் நடித்துள்ளாராம். இன்பநிதி படத்திற்கு பின்னரே, மாரி செல்வராஜ், கார்த்தி மற்றும் தனுஷ் படங்களில் கவனம் செலுத்துவார் எனவும் கூறப்பட்டுள்ளது.