தொடர் சர்ச்சையில் சிக்கும் அதிபுருஷ்; 300 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பாளர்கள் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
சென்ற வாரம் வெளியான 'ஆதிபுருஷ்' திரைப்படம் எந்த நேரத்தில் அறிவிக்கப்பட்டதோ, அப்போதிருந்து தொடர்ந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
குறிப்பாக திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட கிராபிக்ஸ், எதிர்மறையான விமர்சனங்களை ஈர்த்தது. அதன் பின்னர் மீண்டும் ரீஒர்க் செய்யப்பட்டு, இந்த திரைப்படம் வெளியானது.
ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை. மாறாக கேலிக்கு உள்ளது.
அதற்கு காரணம், அதன் தயாரிப்பாளர்கள் பயன்படுத்திய வியாபார யுக்தியும், படத்தில் இடம் பெற்ற காட்சிகளும் தான்.
இந்தியா மட்டுமின்றி, நேபாளத்திலும் இந்த திரைப்படம் கண்டனத்திற்கு உள்ளது.
அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற வசனத்தில், சீதா தேவியை, 'இந்தியாவின் புதல்வி' என குறிப்பிட்டு இருந்தது, நேபாள மக்களின் நம்பிக்கையை கேள்விக்குரியதாகிய காரணத்தால், இந்த படத்தை அங்கே திரையிட தடையும் விதித்தனர்.
card 2
300 கோடி வசூலை ஈட்டிய ஆதிபுருஷ்!
வசனங்களுக்கு கண்டனம் வலுத்ததை அடுத்து, படத்தின் இயக்குனர் தரப்பும், தயாரிப்பாளர்கள் தரப்பும், வசனங்கள் மாற்றப்படும் என வாக்குறுதி அளித்தனர்.
எனினும் பிரச்னை ஓய்ந்தபாடில்லை. படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் ராமனை கோவக்காரனாக சித்தரித்ததை எதிர்த்து, ஒரு நபர் கோர்ட் படி எறியுள்ளார்.
இதிகாசங்களின்படி, ராமர் எப்போதும் நிதானத்தை கடைபிடிப்பவர் என்றும், படத்தில் அந்த கதாபாத்திரம் கோவக்காரனாக சித்தரிக்கப்பட்டுள்ளதென்றும் புகார் கூறியுள்ளார். இதனிடையே, இந்த திரைப்படம் உலகளவில் 300 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது எவ்வளவு தூரம் உண்மை எனத்தெரியவில்லை. காரணம், இந்த திரைப்படத்திற்கு நம்மூர் தியேட்டர்களில் இருக்கைகள் காலியாக இருந்ததாக செய்தி.