
நடிகர் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2016-இல் தொடங்கப்பட்ட திரைப்படம் 'துருவநட்சத்திரம்'.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்பை தூண்டிய இந்த படம், பல காரணங்களால் இடையிலேயே நிறுத்தப்பட்டது.
இதற்கிடையில், திரைப்படத்தின் மீதம் இருந்த படப்பிடிப்புகளும், பாடல் ரெகார்டிங்கும் வேகமாக நடைபெற்று வருவதாக கடந்த பிப்ரவரி மாதம் படத்தின் தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, வரும் நவம்பர் 24ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி ஸ்பெஷலாக இப்படம் வெளியாகவுள்ளது என்பது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
துருவ நட்சத்திரம்' திரைப்படம் ரிலீஸ் தேதி
#CinemaUpdate | கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு! #SunNews | #DhruvaNatchathiram | @menongautham | @chiyaan pic.twitter.com/ZNGVKvFx3O
— Sun News (@sunnewstamil) September 23, 2023