Loading...
நெல்லையில் 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' தொடக்கம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் லோகோ
நெல்லையில் நடிகை திரிஷா பெயரில் புதிய பேரவை தொடங்கப்பட்டுள்ளது.

நெல்லையில் 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' தொடக்கம்: சமூக வலைதளங்களில் வைரலாகும் லோகோ

எழுதியவர் Vasuki
Nov 23, 2026
04:52 pm

செய்தி முன்னோட்டம்

முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் நடிகை திரிஷா கலந்துகொண்டதைத் தொடர்ந்து, அவரை அரசியலுடன் தொடர்புபடுத்தி திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், திருநெல்வேலியில் நடிகை திரிஷா பெயரில் 'இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு அரசியல் கட்சிகளில் பணியாற்றிய ராஜகோபால் என்பவர் இந்த அமைப்பைத் தொடங்கியிருப்பதுடன், திரிஷா வணக்கம் சொல்வது போன்ற புகைப்படத்துடன் 'பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக' என்ற வாசகத்தைக் கொண்ட லோகோவையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

திரிஷாவிடம் அனுமதி பெறவில்லை

முதல்வர் விஜய்யுடன் இணைந்து மக்கள் பணி செய்ய வேண்டும்

இயக்கத் தொடக்கம் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், சமூக சேவை செய்யும் நோக்கத்திற்காகவே இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளதாகவும், முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து நடிகை திரிஷாவும் மக்கள் பணியாற்றினால் அது தமிழக மக்களுக்கு மிகவும் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், 2003-ஆம் ஆண்டிலிருந்து தான் திரிஷாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதாகக் கூறிய அவர், இந்தப் பேரவையைத் தொடங்குவது குறித்து இதுவரை நடிகை திரிஷாவிடம் எவ்வித அனுமதியோ அல்லது தகவலோ தெரிவிக்கவில்லை என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சியினரின் மீம்ஸ் மழை

சமூக வலைதளங்களில் வைரலாகும் லோகோ

திரிஷாவுக்கு தெரியாமலேயே அவரது பெயரில் 'இளைய புரட்சித் தலைவி' என்ற பட்டத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேரவையின் லோகோ மற்றும் செய்திகள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.

இதனைப் பார்த்த திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இணையவாசிகளும் விதவிதமான கேலி, கிண்டல் மீம்ஸ்களை பதிவிட்டு இணையத்தை அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.

இதற்கு நடிகை திரிஷா தரப்பிலிருந்து ஏதேனும் விளக்கம் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT