NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / "ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    "ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'
    பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி போன்ற இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன

    "ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்": பாடல்கள் காப்புரிமை வழக்கில் இளையராஜா கொடுத்த 'பதில்'

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 11, 2024
    09:26 am

    செய்தி முன்னோட்டம்

    இளையராஜாவின் பாடல்கள் காப்புரிமை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்த வாதத்தில், இசை நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "அனைவரையும் விட தான் மேலானவர் என இசையமைப்பாளர் இளையராஜா நினைக்கிறார்" எனக்கூறியதற்கு, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,"ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான். வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்" என பதிலளித்துள்ளார்.

    இசைஞானி இளையராஜா பல்லாயிரக்கணக்கான பாடல்களை இசையமைத்துள்ளார்.

    அதில், கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி போன்ற இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.

    ஆனால் ஒப்பந்தகாலம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்துவதாகக் கூறி, இளையராஜா உயர்நீதிமன்றத்தில் சில வருடங்களுக்கு முன்னர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    காப்புரிமை 

    காப்புரிமை வழக்கில் இசை நிறுவனங்கள் மேல்முறையீடு

    முன்னதாக இந்த காப்புரிமை வழக்கில், தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கு இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.

    தொடர்ந்து மேல்முறையீடு செய்தார் இளையராஜா.

    வழக்கின் விசாரணை காலத்தில், இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தான், இசை நிறுவனங்கள், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களைப் பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக மனுத்தாக்கல் செய்தது.

    ராயல்டி

    தயாரிப்பாளர்களிடம் சம்பளம் பெற்றதும் உரிமைகளை இழக்கும் இசையமைப்பாளர்கள்

    நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையில், அப்போது, இசை நிறுவனங்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய்நாரயண், இந்தியத் திரைப்படத்துறையில் உள்ள இசையமைப்பாளர்கள், ஒரு குறிப்பிட்ட திரைப்படத்திற்காக ஒரு திரைப்பட தயாரிப்பாளரிடமிருந்து ஊதியம் பெற்றவுடன், அனைத்து உரிமைகளையும் இழந்து விடுவதாகத் தெரிவித்தார்.

    எனவே, காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜாவை கருத முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

    மேலும், இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று தன்னை நினைப்பதாகக் தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "ஆம், நான் எல்லோருக்கும் மேலானவன் தான் எனவும் வீம்புக்காக இதனைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்" என தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    embed

    பாடல்கள் காப்புரிமை வழக்கு

    #JUSTIN | "ஆமாம், நான் எல்லோருக்கும் மேலானவன்தான்" - பாடல்கள் காப்புரிமை வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு பதில் இளையராஜாவின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ, அகி ஆகிய இசை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நிறுவனங்கள் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில்... pic.twitter.com/LH3kzziZw6— Sun News (@sunnewstamil) April 10, 2024

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இளையராஜா
    இளையராஜா
    இசையமைப்பாளர்
    இசையமைப்பாளர்கள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    இளையராஜா

    'விடுதலை' படத்தில், இளையராஜா இசையில் பாடும் தனுஷ்; இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ வெற்றிமாறன்
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    இசைஞானி இளையராஜா வீட்டில் நேர்ந்த சோகம்; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி  கோலிவுட்
    நடிகர் மனோபாலா மறைவு: முதல்வர் ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல் மற்றும் பலர் இரங்கல்  தமிழ் திரைப்படங்கள்

    இளையராஜா

    'கண்ணே கலைமானே' இசை ஞானி இளையராஜாவின் 81வது பிறந்த நாள்!  பிறந்தநாள்
    'வலையோசை கலகலவென' இசை ஞானி இளையராஜாவுக்கு நடிகர் கமலஹாசன் பிறந்த நாள் வாழ்த்து!  பிறந்தநாள்
    இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து கூறிய தமிழக முதல்வர்  மு.க ஸ்டாலின்
    உருவாகிறதா தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக்? மனம் திறந்த இயக்குனர் பால்கி தனுஷ்

    இசையமைப்பாளர்

    லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி லியோ
    படக்குழுவினருக்கு மருத்துவ முகாம் நடத்த கேட்டுக் கொண்ட நடிகர் அஜித் நடிகர் அஜித்
    விக்ரமின் தங்கலான் டீசர் வெளியானது விக்ரம்
    நெட்ப்ளிக்சில் நாளை வெளியாகிறது ஜவான் திரைப்படத்தின் எக்ஸ்டெண்டெட் கட் இயற்கை

    இசையமைப்பாளர்கள்

    "இந்திய சினிமாவில் இசைக்கு சிறந்த பங்களிப்பு" அளித்ததற்காக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு விருது கோலிவுட்
    தான் 90 சதவிகிதம் குணமாகி விட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பை துவங்க போவதாகவும் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார் கோலிவுட்
    இசைக்கான மூன்றாம் கிராமி விருது வென்ற பெங்களூரை சேர்ந்த பாப் இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் பெங்களூர்
    இசையமைப்பாளர் வித்யாசாகர் பிறந்தநாள்: மலரே...மௌனமா.. என வருடிய மெலடி மன்னரின் பிறந்தநாள் இன்று கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025