Page Loader
ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீர் உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் வழக்கு: இயக்குநர் அமீர் உள்ளிட்ட தமிழ் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்

எழுதியவர் Sindhuja SM
Mar 09, 2024
05:32 pm

செய்தி முன்னோட்டம்

2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் மோசடி வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு(என்சிபி) கைது செய்துள்ளது. என்சிபி துணை இயக்குநர் ஜெனரல்(செயல்பாடுகள்) ஞானேஷ்வர் சிங், சாதிக் கைது செய்யப்பட்டதை உறுதி செய்தார். மேலும், "நாங்கள் விசாரித்துக்கொண்டிருந்த இந்தியா-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்கின் தலைவர் இவர் ஆவார்." என்று அதிகாரி ஞானேஷ்வர் சிங் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் இயக்குநர் அமீர் மற்றும் ஜாஃபர் சாதிக் இடையே தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சிங் கூறியுள்ளார். விசாரணை முடிவடைந்த பிறகு, பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

தமிழ் திரைப்பிரபலங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்