பிரபல தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் லோகோ உருவான கதை
பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம், மூன்று தலைமுறைக்கும் மேலாக படதயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி, மற்ற மொழிகளிலும் திரைப்படங்களை தயாரித்துள்ளனர். அந்த தயாரிப்பு நிறுவனத்தின் பிரபலமான லோகோ உலக உருண்டையும், 3D வடிவத்தில் AVM என்ற பெயர் பொறிக்கப்பட்ட படமும்தான். தற்போது அந்த AVM லோகோவை உருவாக்கியதன் பின்னணி கதையை, ஏவிஎம் குழுமத்தின், தற்போதைய தலைமுறை இயக்குனரான அருணா குகன் தெரிவித்துள்ளார். அவர் கூற்றின்படி, "இதை திரு.ஜி.எச்.ராவ் என்னுடைய கொள்ளு தாத்தா ஸ்ரீ ஏ.வி.மெய்யப்ப செட்டியாருடன் வடிவமைத்தார். ஆரம்பத்தில் இந்த லோகோ, கருப்பு-வெள்ளை நிறத்தில் தான் இருந்தது". அந்த கருப்பு வெள்ளை லோகோவை, இசை பின்னணியுடன் வேண்டும் என மெய்யப்ப செட்டியார் விரும்பி உள்ளார். அதுவும் 3D வடிவத்தில்.
தற்போதுள்ள லோகோவை ஒளிப்பதிவு செய்து, படம்பிடித்து ராஜிவ் மேனன்
AVM செட்டியார் விருப்பத்தை, அந்த நிறுவனத்தின் கலை இயக்குனர் திரு.ஏ.பாலு, மரத்தில் வரைய, ஏவிஎம் நிறுவன தச்சர் திரு.ஆறுமுக ஆச்சாரி 3டியில் செதுக்கியுள்ளார். அதுனால் வரை 35mm படத்திற்கு தகுந்தாற் போல இருந்த லோகோ, பின்னர் சினிமாஸ்கோப்பிற்காக தன்னை நவீனப்படுத்திக்கொண்டது. பல பிரபல இயக்குனர்கள் அதை காலத்திற்கேற்ப ஷூட் செய்துள்ளனர். முதல் பதிப்பையும், பின்னர் ஈஸ்ட்மேன் கலர் பாதிப்பையும் மாருதி ராவ் படமாக்கினார். அடுத்த பதிப்பை ஏ.சி. திரிலோக்சந்தர் இயக்கினார். அடுத்த பதிப்பை, பாபு என்பவர் ஒளிப்பதிவு செய்ய, எஸ்பி முத்துராமன் இயக்கினார். இன்று இருக்கும் பதிப்பை இயக்கியது ராஜிவ் மேனன்! "பின்னணி இசை, மோகன ராகத்தின் அடிப்படையில், எங்களின் அதிகாரப்பூர்வ இசையமைப்பாளர் திரு.ஆர்.சுதர்சனம் இயற்றியது" என அருணா குகன் தெரிவித்துள்ளார்.