'லியோ' படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியானது
செய்தி முன்னோட்டம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'லியோ'.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மன்சூர்அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தினை அதிகரிக்க இப்படம் வெளியாகும் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று(செப்.,21) இப்படத்தின் ஹிந்தி போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
ஹிந்தி போஸ்டர்
KEEP CALM AND FACE THE DEVIL
— Seven Screen Studio (@7screenstudio) September 21, 2023
Witness the ultimate face-off on October 19th 🤜🤛#LeoPosterFeast #LeoHindiPoster#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay @akarjunofficial @Jagadishbliss @GTelefilms @SonyMusicSouth #Leo pic.twitter.com/5p3sfTXCb2