
ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் நடிகர்கள் இவர்கள் தான்!
செய்தி முன்னோட்டம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்கவுள்ள திரைப்படம் 'ஜெயிலர் 2', 2023ல் வெளியாகி வெற்றியை பெற்ற 'ஜெயிலர்' படத்தின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படத்தில் பல பிரபல நடிகர்கள் இணைகின்றனர்.
படத்தில் ரஜினியுடன் மலையாள நட்சத்திரம் ஃபஹத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர் கடந்த வருடம் ரஜினியுடன் 'வேட்டையன்' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது கேரளாவின் அட்டப்பாடியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதில், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.
ஃபஹத் ஃபாசில் அடுத்த ஷெட்யூலில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
விவரங்கள்
ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ள முன்னணி நட்சத்திரங்கள்
தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா, மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.
இவர்களை தவிர எஸ்.ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகியுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ப்ரோமோ வீடியோவில், இந்த படத்திலும் ரஜினிகாந்த் ஓய்வுபெற்ற ஜெயிலராக 'டைகர்' முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பதை சன் பிக்சர்ஸ் உறுதி செய்தது.
இந்த படத்துக்கும் இசையமைப்பாளராக அனிருத் நீடிக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#Jailer2 Casting 🥵🔥
— AmuthaBharathi (@CinemaWithAB) April 30, 2025
- Superstar Rajinikanth
- Balayya
- Shivarajkumar
- Mohanlal
- FahadhFaasil
- SJSuryah (Buzz) pic.twitter.com/Ir0msWk9Za