இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல் இதோ!
மே மாதத்தின் வார இறுதிக்கு நாம் வந்துவிட்ட நிலையில் இன்று மட்டும் 3 படங்கள் கோலிவுட்டில் வெளியாகி உள்ளது. காசேதான் கடவுளடா, கழுவேத்தி மூர்க்கன், தீராக் காதல் ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளது. காசேதான் கடவுளடா: கண்ணன் இயக்கத்தில் சிவா, யோகி பாபு, கருணாகரன், புகழ், பிரியா ஆனந்த், ஊர்வசி மற்றும் பலர் நடித்துள்ள படம் 'காசேதான் கடவுளடா'. இந்த படத்திற்கு ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். இதற்கு முன்பே பல முறை வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிப் போன படம். இந்த முறையாவது கண்டிப்பாக வெளியாகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 1972ம் ஆண்டு வெளிவந்த படத்தின் மறு உருவாக்கம் என்று கூறப்படுகிறது.
ரிலீஸ் ஆகும் படங்களின் பட்டியல்
கழுவேத்தி மூர்க்கன்: சை கவுதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கழுவேத்தி மூர்க்கன்'. படத்திற்கு இமான் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் டிரைலருக்குக் இதுவரை நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாக நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிப்பார் அருள்நிதி. இதற்கு முன்பு வெளிவந்த சில படங்கள் அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை என்றாலும் இந்தப்படம் அதை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீராக் காதல்: ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தீராக் காதல்'. சித்துகுமார் இசையமைப்பில், ஜெய், ஐஸ்வரியா ராஜேஷ், ஷிவதா & பலர் நடித்திருக்கும் படம். படத்தின் பெயரிலேயே இது ஒரு தீவிரமான காதல் கதையாக தான் இருக்கும் என்று தெரிகிறது.