LOADING...
கருப்பு படத்தில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு
'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்

கருப்பு படத்தில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 05, 2026
03:49 pm

செய்தி முன்னோட்டம்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள "கருப்பு" திரைப்படத்தில் இருந்து ஆர்.ஜே. பாலாஜி விலகிவிட்டதாக பரவிய தகவலுக்கு, தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது பாணியில் பதிலடி கொடுத்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு' திரைப்படத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பின்னணி வேலைகளின் போது தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும், ஆர்.ஜே. பாலாஜிக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அதனால் ஆர்.ஜே. பாலாஜி படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தகவல் ஒன்று வேகமாகபரவியது.

பதில்

பதில் மற்றும் திரைப்பட விவரங்கள்

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது 'X' பக்கத்தில், நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் பிரபலமான "டேய் சும்மா இருடா" என்ற மீம்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தில் எந்த மோதலும் இல்லை என்பதையும், பரப்பப்படுவது வெறும் வதந்தி என்பதையும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து, அதில் கடவுள் நம்பிக்கையை இணைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, நட்டி நட்ராஜ், சுவாசிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement