
ஹாரிபாட்டர் பட நடிகர் சர் மைக்கேல் காம்பன் மரணமடைந்தார்
செய்தி முன்னோட்டம்
ஹரிபாட்டர் படங்களில் நடித்த சர் மைக்கேல் காம்பன் தனது 82வது வயதில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சர் மைக்கேல் காம்பன் ஹாரிபாட்டர் சீரிஸில் ஆறு படங்களில் நடித்துள்ளார்.
ப்ரொபசர் ஆல்பஸ் டம்பில்டோர் என்ற கதாபாத்திரத்திற்காக ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர்.
சர் மைக்கேல் அயர்லாந்து தலைநகரான டப்ளின் நகரில் பிறந்தவர். சுமார் ஐந்து தசாப்தங்கள் நீடித்த இவரது சினிமா வாழ்க்கையில் இவர் நான்கு முறை பிரிட்டிஷ் அகாடமி விருதுகளை வென்றுள்ளார்.
"நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்த, அன்பான கணவரும், தந்தையுமான சர் மைக்கேல் காம்பன் குடும்ப உறுப்பினர்கள் முன் அமைதியாக மரணித்தார்"
இவ்வாறு காம்பன் மனைவி மற்றும் அவரது மகன் பெர்கஸ் கூறினர்.
ட்விட்டர் அஞ்சல்
ஹாரிபாட்டர் பட நடிகர் நிமோனியாவால் காலமானார்
LONDON (AP) — Actor Michael Gambon, who played Dumbledore in the later Harry Potter films, has died at age 82, his publicist says. pic.twitter.com/fvaFgLXpBK
— philip lewis (@Phil_Lewis_) September 28, 2023