நடிகர் பசுபதியின் பிறந்தநாள்: அவர் நடிப்புத்திறமையை வெளிக்காட்டிய சில படங்கள்
கோலிவுட்டின் வெர்சடைல் நடிகர் பசுபதி. வில்லன், குணச்சித்திரம், காமெடி என எந்த கதாபாத்திரைத்தை தந்தாலும், அதில் முத்திரையை பதிக்கும் நபர் பசுபதி. இன்று பிறந்தநாளை கொண்டாடும் இவர், ஆரம்பநாட்களில் கூத்துப்பட்டறையில் செதுக்கப்பட்டவர். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால், வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போதே, கூத்துப்பட்டறையில் தன்னை இணைத்து கொண்டார். நாசர் உடன் ஏற்பட்ட நட்பால், கமல்ஹாசனால் கவனிக்கப்பட்டு, 'மருதநாயகம்' படத்தில் முக்கிய வேடத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், Housefull , மாயன், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் சிறு வேடங்களில் தோன்றியவர், தன்னுடைய நடிப்பால் மிளிர்ந்த படங்களின் பட்டியல் இதோ: தூள்: ஆதி கதாபாத்திரத்தில், வில்லி சொர்ணக்காவின் வலதுகையாக மிரட்டி இருப்பார் பசுபதி
பன்முக நடிப்பை வெளிப்படுத்தும் பசுபதி
விருமாண்டி:கொத்தாள தேவராக, கமலுக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திருப்பாச்சி:'பட்டாசு'பாலு என அவர் கூறும் மாடுலேஷனே அபாரம். ஹீரோ விஜய்யை மிரட்டும் வில்லனாக பசுபதி நடித்திருப்பார். மும்பை எக்ஸ்பிரஸ்:வில்லனாக நடித்து கொண்டிருந்தவருக்கு, காமெடியும் எளிதாக வரும் என்று காட்டிய படம். வெயில்:தேசிய விருது பெற்ற இந்த திரைப்படத்தில், பாசத்திற்காக உருகும் மகனாக குணச்சித்திர வேடத்தில் நடித்திருப்பார் பசுபதி. ராமன் தேடிய சீதை:பார்வையற்ற நபராக சவால் மிகுந்த கதாபாத்திரத்தில், ஹீரோவாக நடித்திருந்தார் பசுபதி. குசேலன்:ரஜினிகாந்தின் நண்பனாகவும், கதையின் முக்கியமான தூணாக 'பாலு' கதாபாத்திரத்தில் நம்மை நெகிழ வைத்தார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா:ஒரு பாதி மட்டுமே வந்தாலும், படத்தை நகர்த்துவதே இவரும், விஜய் சேதுபதியும் தான். சர்பட்டா பரம்பரை:'ரங்கன் வாத்தியார்' கதாபாத்திரத்தில் மிடுக்குடன் நடித்திருப்பார் பசுபதி
இந்த காலவரிசையைப் பகிரவும்