
பிறந்தநாள் ஸ்பெஷல்: 90 'களின் கனவுகன்னி ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநிலத்தில் விஜயலக்ஷ்மியாக பிறந்த நடிகை ரம்பா, தமிழ், தெலுங்கு, மலையாளம், போஜ்புரி என 8 இந்திய மொழிகளில், இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளார். 90'களில் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வந்த நடிகை ரம்பா, அவரின் துள்ளலான நடனத்திற்கு பெயர் போனவர்.
அவரின் பிறந்தநாளான இன்று, அவரின் பிரபலமான பாடல்கள் சிலவற்றை பற்றி ஒரு தொகுப்பு.
உள்ளதை அள்ளித்தா: இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ஹிட் தான். இருப்பினும் 'அழகிய லைலா' பாடலில், கார்த்திக்குடன் ஓய்யாரமாக ரம்பா நடனமாடியது ரசிகர்களை கிறங்கடித்தது எனலாம்.
அருணாச்சலம்: 'அல்லி அல்லி' என்ற பாடலில் ரஜினிகாந்துடன் நடனம் ஆடி இருப்பார். ரஜினியுடன் இவர் நடித்த முதலும், கடைசியுமான படம் இதுதான்.
card2
ரம்பாவின் சூப்பர்ஹிட் பாடல்கள்
VIP: நடிகர் பிரபுதேவாவின் நடனத்தை குறித்து சொல்லவே வேண்டாம். ஆனால், அவரே வியந்து போகும் அளவிற்கு அவருடன் மின்னல் வேகத்தில் நடனம் ஆடி இருப்பார் ரம்பா.
காதலர் தினம்: 'ஓ மரியா' பாடலில் ரம்பாவை வித்தியாசமான கெட்அப்பில் பார்க்கலாம். அவரின் அதிவேக நடனத்திற்காகவே இந்த பாடல் பிரபலமானது.
காதலா காதலா: கமல்ஹாசன், பிரபு தேவா, சௌந்தர்யா என ஒரு பட்டாளமே நடித்து, மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம். இதில், கமல், பிரபுதேவா என நடனத்தில் உச்சம் தொட்டவர்களும் ஈடு கொடுத்து ஆடி இருப்பார் ரம்பா.
மின்சார கண்ணா: நடிகர் விஜய்க்கு நடனத்தில் இணையாக ஆடுவது சிம்ரன் மற்றும் ரம்பா மட்டும்தான். குறிப்பாக, இந்த படத்தில் இடம் பெற்ற டூயட் பாடல்கள் மிகவும் பிரபலம்.