Page Loader
நடிப்பு அசுரன் 'தனுஷ்' பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் 
நடிப்பு அசுரன் 'தனுஷ்' பிறந்தநாள் ஸ்பெஷல்!

நடிப்பு அசுரன் 'தனுஷ்' பிறந்தநாள் ஸ்பெஷல்: அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்களின் பட்டியல் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 28, 2023
08:46 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் தனுஷ் இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அன்றைய தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிப்பதற்கான எந்த ஒரு இலக்கணமும் இன்றி, தன்னுடைய திறமையை மட்டுமே நம்பி முன்னேறிய தனுஷ், இன்று அசைக்கமுடியாத உச்சத்தை அடைந்துள்ளார் என்றால், அதற்கு அவரின் உழைப்பு மட்டுமே முழுமுதல் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை பயணப்பட்டுள்ளார் தனுஷ். இதுவரை தமிழ் சினிமாவிலிருந்து ஆங்கில சினிமாவில் நடித்த ஒரே ஹீரோ ரஜினிகாந்த் மட்டுமே. ஆரம்பகால கட்டத்தில் பல அவமானங்கள், சறுக்கல்களை சந்தித்தாலும், சுதாரித்து கொண்டு, தன்னுடைய திரைப்பயணத்தை தானே செதுக்கி கொண்டார் தனுஷ். கடைசியாக 'வாத்தி' என்ற திரைப்படத்தில் நடித்திருந்த தனுஷின் அடுத்தடுத்து ரிலீஸாகவிருக்கும், தயாரிப்பிலிருக்கும் படங்களின் பட்டியல் இதோ:

card 2

கேப்டன் மில்லர் முதல் வடசென்னை 2 வரை 

கேப்டன் மில்லர்: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் அடுத்து வெளியாகவிருக்கும் பீரியட் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'. இந்த படத்தில் வித்தியாசமான கெட்அப்பில், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்கிறார். பிரியங்கா மோகன், சுதீப் கிஷன், சிவராஜ்குமார் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். வரும் டிசம்பர் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது. D50: தனுஷ் இயக்கி-நடிக்கும் இந்த திரைப்படத்தை, சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது இப்படத்தின் டைட்டில் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடசென்னை-2: தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படம் நீண்ட நாட்களாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தில் ஒருவன்-2: செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ்! முதல்பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகுமென செல்வராகவன் குறிப்பிட்டுள்ளார்.