'டாக்ஸி டாக்ஸி' என நம்மை ஆட்டம் போட வைத்த பாடகர் பென்னி தயாளின் பிறந்தநாள்
'பல்லேலக்கா பல்லேலக்கா', 'டாக்ஸி டாக்ஸி' என பாடி, நம்மை ஆட்டம் போட வைத்ததாகட்டும், 'உனக்கென வேணும் சொல்லு' என மெலடி பாடல்களில் மனதை வருடுவதாகட்டும், வெர்சடைல் சிங்கர் என பெயர் பெற்ற பாடகர் பென்னி தயாள், அவரின் இனிமையான குரலால் நம்மை மயக்க தவறுவதே இல்லை. அவரின் பிறந்தநாளான இன்று, அவர் பாடி புகழ் அடைந்த சில பாடல்களை பற்றி ஒரு சிறிய ரீவைண்ட்: மாயா மாயா, பாபா: முதல் பாடலே அபாரமாக அமைந்தது. ரஜினி தயாரிப்பில், அவருக்கே குரல் கொடுக்கும் பாக்கியம் எத்தனை பேருக்கு அமையும்?! முதன் முதலாய், லேசா லேசா: த்ரிஷா ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இந்த படத்தின் ஆல்பம் முழுவதுமே ஹிட்.
பென்னி தயாள் பாடிய ஹிட் பாடல்கள்
நீ மார்லின் மன்றோ, அழகிய தமிழ் மகன்: அவர் தனியாக பாடி பிரபலமான பாடல்களில் இது முக்கியமான பாடல். மேலைநாட்டு பாணியில் பாடி இருந்தார். டாக்ஸி டாக்ஸி, சக்கரக்கட்டி: இந்த பாடல் வெளியான நாள்முதல், இன்றுவரை பிரபலமாக உள்ளது. ஏத்தி ஏத்தி, வாரணம் ஆயிரம்:ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இந்த பாடலில், நரேஷ் ஐயருடன் இணைந்து பாடியிருப்பார். பூங்காற்றே, பையா: இன்றும் ரோடு ட்ரிப் சாங்ஸ் லிஸ்டில் தவறாமல் இடம்பெரும் பாடல், யுவன்ஷங்கர் ராஜா இசையில் அமைந்தது அரிமா அரிமா, எந்திரன்: ஹரிஹரன், நரேஷ் ஐயர் ஆகியோருடன் இணைந்து பாடிய பாடல் இது. உனக்கென்ன, என்னை அறிந்தால்: ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தந்தை-மகளுக்கான இந்த பாடல், மெலோடியாக நம்மை வருட தவறுவதே இல்லை.