
முதல்முறையாக மலையாள படத்தை இயக்கவிருக்கிறார் GVM ; ஹீரோ யார் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
தமிழ் சினிமாவின் அசைக்கமுடியாத ஒரு ஆளுமையாக இருப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.
இவர் ஆரம்ப காலத்தில் ராஜிவ் மேனன் இடம் உதவி இயக்குனராக பணி புரிந்து, பின்னர் 'மின்னலே' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்.
பின்னர் தெலுங்கு, ஹிந்தி படங்களையும் அவர் இயக்கி இருந்தாலும், அவரது தாய் மொழியான மலையாளத்தில் இது வரை அவர் படங்களை இயக்கியதில்லை.
அந்த குறையை போக்கும் வகையில் தற்போது அவர் மலையாள திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளார்.
அதுவும் மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டி-ஐ கதாநாயகனாக வைத்து! இப்படத்தின் பூஜை இன்று கொச்சியில் நடந்தது.
இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கக்கூடும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை தயாரிக்கவிருப்பதும் மம்மூட்டியின் MammoottyKampany தயாரிப்பு நிறுவனம் தான்.
ட்விட்டர் அஞ்சல்
GVM - மம்மூட்டி படத்தின் பூஜை
And the BIGGGIIEEE starts to roll !!!!#Mammooty & #GauthamMenon film kick starts today in Kochi! 💥💞🤩💐💫📽❣️🎞🎉🎬✨️@mammukka @menongautham@MKampanyOffl pic.twitter.com/PhL7BfDp7T
— Girish Johar (@girishjohar) July 10, 2024