'குலுகுலு' படத்தின் தெலுங்கு பதிப்பில் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் இயக்குனர் ரத்னகுமார்
சமீப காலமாக, சென்சார் போர்டின் செயல்பாட்டை பலரும் கண்டித்த வண்ணம் உள்ளனர். ஷாருக்கான் நடித்த 'பதான்' படத்தின் ஆன்-ஸ்கிரீன் பதிப்பில், வில்லனின் உதவியாளர்களில் ஒருவரை, உக்ரைனின் ஏஜெண்டாக காட்டப்பட்டது. ஆனால், அசல் பதிப்பில், அவர் ரஷ்யா உளவுத்துறை ஏஜெண்டாக எடுக்கப்பட்டது. சென்சார் போர்டின் வலியுறுத்தலால், அந்த காட்சி டப்பிங்கில் மாற்றப்பட்டது. கடந்த சில மாதங்களில் வெளியான, 300க்கும் மேற்பட்ட படங்களில், 1,000க்கும் மேற்பட்ட மாற்றங்களில் (சென்சார் கட்) வெட்டுக்களில் இதுவும் ஒன்றாகும். இதே போல், தமிழில் வெளியான 'மூக்குத்தி அம்மன்-இன்' ஹிந்தி பதிப்பு, 'குலுகுலு' படத்தின் தெலுங்கு பதிப்பில், 'பிரதம மந்திரி' என்ற வார்த்தை வரும் இடத்தில், முன்னறிவிப்பின்றி கத்திரி போடப்பட்டது. 'இது நியாயமற்ற செயல்', என்று கண்டித்துள்ளார் குலுகுலு படத்தின் இயக்குனர்.