இசை உலகில் லேடி காகா, கென்ட்ரிக் லாமர் ஆதிக்கம்! 2026 கிராமி விருதுகளின் முழு வெற்றியாளர்கள் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
இசைத்துறையின் ஆஸ்கார் விருதாக கருதப்படும் 68-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா, பிப்ரவரி 1, 2026 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள Crypto.com அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. பிரபல நகைச்சுவை நடிகர் ட்ரெவர் நோவா தொடர்ந்து 6-வது முறையாக இந்த விழாவை தொகுத்து வழங்கினார். ஆண்டின் சிறந்தப் பாடல் (Song of the Year): 'Wildflower' பாடலுக்காக Billie Eilish இந்த விருதைக் கைப்பற்றினார். சிறந்த பாப் ஆல்பம் (Best Pop Vocal Album): Mayhem ஆல்பத்திற்காக Lady Gaga விருதை வென்றார். இவர் Abracadabra பாடலுக்காகச் சிறந்த நடன பாப் ரெக்கார்டிங் விருதையும் வென்றுள்ளார்.
விருதுகள்
சாதனை படைத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்
ராப் இசையில் சாதனை: பிரபல ராப்பர் Kendrick Lamar தனது 'GNX' ஆல்பத்திற்காகச் சிறந்த ராப் ஆல்பம் உட்பட மொத்தம் 3 விருதுகளை வென்று அசத்தினார். சிறந்த புதிய கலைஞர் (Best New Artist): இளம் கலைஞர் Olivia Dean இந்த கௌரவத்தை பெற்றார். வரலாறு படைத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்: புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தனது முதல் கிராமி விருதை வென்றார். இதன் மூலம் அவர் EGOT (Emmy, Grammy, Oscar, Tony) என்ற நான்கு உயரிய விருதுகளையும் வென்றவர்கள் பட்டியலில் இணைந்தார். வரலாற்றிலேயே முதன்முறையாக, KPop Demon Hunters குழுவின் 'Golden' பாடல், சிறந்த விஷுவல் மீடியா பாடலுக்கான விருதை வென்று கே-பாப் இசைக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது.
நேரலை
இந்தியாவில் நேரலை
இந்திய ரசிகர்கள் இந்த விழாவைப் பிப்ரவரி 2-ஆம் தேதி காலை 6:30 மணி முதல் ஜியோ ஹாட்ஸ்டார்s (JioHotstar) தளத்தில் நேரலையாகக் கண்டனர். ரெட் கார்பெட் நிகழ்வில் நடிகை சாப்பல் ரோன் (Chappell Roan) அணிந்து வந்த விசித்திரமான உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ட்ரெவர் நோவா தனது நகைச்சுவையான பேச்சின் ஊடே அமெரிக்க அரசியல் நிகழ்வுகளைக் கிண்டல் செய்ததும் விழாவில் கலகலப்பை ஏற்படுத்தியது.