ஸ்டைலிஷ் லுக்கில் விஜய்..அழகு பதுமையாக மீனாட்சி: GOAT 3வது பாடல் கிலிம்ப்ஸ் வெளியானது
நடிகர் விஜய் முதல்முறையாக இயக்குனர் வெங்கட் பிரபு உடன் இணைந்துள்ள திரைப்படம் GOAT. செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படத்திலிருந்து ஏற்கனவே 2 பாடல் வெளியான நிலையில், மூன்றாவது பாடல் நாளை வெளியாகவுள்ளது. முதல் இரண்டு பாடலும் விஜய் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் கிலிம்ப்ஸ் இன்று மாலை வெளியானது. முன்னதாக இந்த அறிவிப்பிற்காக வெளியிட்ட போஸ்டரில் நடிகர் விஜய் யூத்தாக காட்சி தருகிறார். செம ஸ்டைலிஷாகவும் உள்ளார். அவருடன் படத்தின் நாயகி மீனாட்சி சவுதரியும் உள்ளார். இருவருக்குமான டூயட் பாடல் இது. இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா உடன் இணைந்து வ்ருஷா பாடியுள்ளார்.