கல்கி 2898AD : வெளியானது ப்ராஜெக்ட்- கே டைட்டில்!
தெலுங்கு இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில், பல கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் 'ப்ராஜெக்ட்-கே' என அழைக்கப்பட்டது. பான் -இந்தியா படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் நாயகனாக பிரபாஸ், நாயகியாக தீபிகா படுகோன் நடிக்கின்றனர். மேலும் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது கமல்ஹாசன். இப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ, அமெரிக்காவில் நடைபெறும் காமிக்-கான் விழாவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதற்காக படக்குழுவினர் நேற்று அமெரிக்காவில் குழுமி இருந்தனர். அறிவிக்கப்பட்டது போலவே, ஹாலிவுட் தரத்தில், ப்ராஜெக்ட்- கே கிலிம்ப்ஸ் வீடியோ வெளியானது. ப்ராஜெக்ட்- கே என்றால் என்ன என அதில் தெரிவித்துள்ளனர். 'கல்கி 2898 AD' என்பதுதான் அது. இப்படத்தில் நடிகர் பசுபதியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.