லவ் டுடே படத்தில் கேலி; கௌதம் மேனனின் பதிலடி
செய்தி முன்னோட்டம்
கோமாளி படத்தின் மூலம் அறிமுமாகி, தனக்கென அங்கீகாரத்தை பெற்றுவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.
கடந்த நவம்பர் மாதம் இவர் இயக்கி மற்றும் நடித்து வெளிவந்த 'லவ் டுடே' படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார், சத்யராஜ், ரவீனா ரவி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர்.
இளைய தலைமுறையினரின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் பாக்ஸ் ஆபிசில் 50 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.
கௌதம் மேனனின் பதில்
கேட்டிருந்தால் நானே நடித்து கொடுத்திருப்பேன் - கௌதம் மேனன்
இப்படத்தில் நாயகியின் போனில் இருக்கும் மெசேஜ்களை பார்ப்பது போன்ற காட்சிகள் இருக்கும்.
அதில் இயக்குனர் கௌதம் மேனன் போல ஒருவரை நடிக்க வைத்து கேலி செய்திருப்பார்கள்.
இந்நிலையில் இதை பற்றி சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கௌதம் மேனன் மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, "இந்த வருடம் குறைந்த பட்ஜெட்டில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களில் லவ் டுடே முக்கியமான படமாகும்.
அந்த படத்தில் என்னை மாதிரி நடித்து கேலி செய்து இருப்பார்கள். இதற்கு என்னை அழைத்திருந்தால் நானே வந்து நடித்து கொடுத்து இருப்பேன்.
பெரிய படங்களுக்கு நடுவில் சிறிய பட்ஜெட் படமான லவ் டுடே வெளிவந்து வெற்றியை பெற்றது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்" என அவர் கூறியுள்ளார்.