
பத்து தல படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட கௌதம் கார்த்திக்
செய்தி முன்னோட்டம்
ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகி கொண்டு இருக்கும் படம் 'பத்து தல'.
இப்படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் ஆவார்.
இது 2017-ல் கன்னடத்தில் வெளிவந்த 'முஃப்தி' என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்த படம் கன்னடத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் பதிவு
கௌதம் கார்த்திக்கின் ட்விட்டர் பதிவு
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த படக்குழு தற்போது படத்தின் டப்பிங் வேலைகளை செய்து வருகிறது.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் ஒரு புதிய அப்டேட்டை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தனது காட்சிகளுக்கான டப்பிங் வேலைகளை முடித்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
கிறிஸ்துமஸ் விடுமுறையொட்டி வெளியாவதாக இருந்த இந்த படம், வேலைகள் முடியாததால் வெளியிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படம் 2023-ல் மார்ச் மாதம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ்க்கான அப்டேட் வெளியாகும் என எதிர்ப்பார்போம்.
ட்விட்டர் அஞ்சல்
கௌதம் கார்த்திக்கின் ட்விட்டர் பதிவு
Finished dubbing my portions for #PathuThala 😊@SilambarasanTR_ @nameis_krishna @StudioGreen2 @DoneChannel1 pic.twitter.com/ZpeV65EQwi
— Gautham Karthik (@Gautham_Karthik) December 22, 2022