Page Loader
கார் பைக்குகள் விற்கும் நிலைமை ஏற்பட்டது! மஞ்சிமா மோகன் தான் உதவினார்
பைக் கார் விற்கும் நிலைமையில் மஞ்சிமா மோகன் தான் ஆதரவாக இருந்தார்

கார் பைக்குகள் விற்கும் நிலைமை ஏற்பட்டது! மஞ்சிமா மோகன் தான் உதவினார்

எழுதியவர் Siranjeevi
May 03, 2023
03:14 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ் சினிமாவின் 90ஸ் இன் பிரபலமான நடிகரான கார்த்திக்கின் மகனான கெளதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டில் வெளியான கடல் திரைப்படத்தில் ஹீரோவாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதன் பின் பல படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார். வை ராஜா வை, என்னமோ ஏதோ, ரங்கூன், தேவராட்டம், பத்து தல என 16 படங்களில் நடித்துள்ளார். இதனிடையே நடிகை மஞ்சிமா மோகனை கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கெளதம் கார்த்திக் 

பைக் கார் விற்கும் நிலைமை ஏற்பட்டது - மனம் திறந்த கெளதம் கார்த்திக்

இருவரும் தேவராட்டம் படத்தில் இணைந்து நடித்தபோது நண்பர்களாக பழகி பின்னர் கெளதம் கார்த்திக் மஞ்சிமாவிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கெளதம் கார்த்திக், கொரோனா காலக்கட்டத்தில் கஷ்டப்பட்டதாகவும், அப்போது கார் மற்றும் பைக்குகளை விற்கும் நிலைமை ஏற்பட்டதாகவும், மஞ்சிமா தான் ஆதரவாக இருந்தார் எனக்கூறினார். மேலும், நான் எந்த முடிவு எடுத்தாலும் அதை மஞ்சிமாவை கேட்டு தான் முடிவு எடுப்பேன் எனவும் கூறினார். திருமணத்தை கூட யாரிடமும் கடன் வாங்காமல் சொந்த செலவில் செய்யவேண்டும் என பார்த்துக்கொண்டேன் எனவும் கூறியுள்ளார் கெளதம் கார்த்திக்.