Page Loader
'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 
வித்தியாசமான கெட்டப்பில் வடிவேலு, கையில் வாளுடன் உதயநிதி!

'மாமன்னன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது 

எழுதியவர் Venkatalakshmi V
May 01, 2023
09:07 am

செய்தி முன்னோட்டம்

தற்போது, கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம், 'மாமன்னன்'. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தில், பாஹத் பாசில், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம்தான், உதயநிதி நடிக்கும் கடைசி படம் எனவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் முழுநேர அரசியலில் கவனம் செலுத்த போகிறார் எனவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் வடிவேலு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (ஏப்ரல் 30) இரவு வெளியானது. அதில் வித்தியாசமான தோற்றத்தில் வடிவேலுவும், அருகிலே உதயநிதியும் அமர்ந்திருப்பது போல இருந்தது. போஸ்டர் வெளியான சில மணி நேரத்திலேயே வைரல் ஆனது. இந்த படத்தில், உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

ட்விட்டர் அஞ்சல்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்