துரந்தர் படத்தை பார்த்த வியந்த பின்லாந்து அதிபர்: இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்திருப்பதாக பேச்சு
செய்தி முன்னோட்டம்
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்த பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், தான் இந்தியா வருவதற்கு முன்பே ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படத்தைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். தனது மகனின் பரிந்துரையின் பேரில் இந்தப் படத்தைப் பார்த்ததாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தைச் சித்தரிக்கும் விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் 2025 இல் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற துரந்தர் படத்தின் இரண்டாம் பாகம், துரந்தர்: தி ரிவெஞ்ச் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இப்படம் மார்ச் 19, 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. மார்ச் 18 ஆம் தேதியே இப்படத்தின் பெய்ட் பிரிவியூ காட்சிகள் திரையிடப்பட உள்ளன. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
டிரெய்லர்
மிரட்டலான டிரெய்லர் மற்றும் நட்சத்திர பட்டாளம்
மார்ச் 7 ஆம் தேதி வெளியான இப்படத்தின் டிரெய்லர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆலியா பட், அனில் கபூர் மற்றும் விக்கி கௌஷல் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் ரன்வீர் சிங்கின் நடிப்பைப் பாராட்டியுள்ளனர். ரன்வீர் சிங்குடன் இணைந்து சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால் மற்றும் சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் மொத்த நீளம் சுமார் 3 மணிநேரம் 55 நிமிடங்கள் (235 நிமிடங்கள்) ஆகும். நீண்ட நேரமாக இருந்தாலும், படத்தின் விறுவிறுப்பான கதைக்களம் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.