ஃபீல்டு மார்ஷல் பீல்ட் மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை படமாகிறது
இந்திய ராணுவத்தின் பெருமைக்குரிய வீரரான 'ஃபீல்டு மார்ஷல் சாம் மனேக்ஷாவின் வாழ்க்கை, திரைப்படமாகிறது. பாலிவுட் நடிகர், விக்கி கௌஷல் நாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் பெயர், 'சாம் பகதூர்'. 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தின் ட்ரைலர், அடுத்த வாரம் நவம்பர் 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், டிரெய்லர் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 1971ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, இந்திய ராணுவத்தின் ராணுவத் தளபதியாக இருந்தவர் மானெக்ஷா. பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய ராணுவ அதிகாரியும் இவர்தான். இவரின் சேவைக்காக இந்திய அரசு, பத்ம பூஷன், பத்ம விபூஷண் போன்ற பல உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.