பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி வெளியாகும் இந்த வாரப் படங்கள்
திரையுலகில் நல்ல கதைகளை மையமாக கொண்டு வெளிவந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்று வெற்றி பெறுகிறது. ஆனால் சில நேரங்களில் பலமான கதைகளோடு நடிகர்களின் நட்சத்திர பலமும் படத்தின் வெற்றிக்குத் தேவைப்படுகிறது. ஹீரோவை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களே தமிழ் சினிமாவில் அதிகம். ஆனால் சமீபகாலமாக பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. நயன்தாரா, திரிஷா போன்ற நடிகைகள் தங்கள் கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த வாரம் மட்டுமே தமிழ் சினிமாவில் பெண் கதாபாத்திரங்களுக்கு கொடுக்கும் 4 படங்கள் வெளியாகி உள்ளன.
இந்த வாரத்தில் வெளிவர இருக்கும் கதாநாயகிகளின் படங்கள்?
பெண் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு, திரிஷா நடிப்பில் இந்த வாரம் வெளியான திரைப்படம், ராங்கி. இது ஒரு ஆக்ஷன் படம் மற்றும் இந்தப் படத்தை சரவணன் இயக்கியுள்ளார். அடுத்தாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா என்கிற படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஜமுனா என்ற கதாபாத்திரத்தில் பெண் ஓட்டுநராக இவர் நடித்துள்ளார். இதனையடுத்து இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் செம்பி வெளியாகி உள்ளது. இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார். பாலிவுட் நடிகையான சன்னி லியோனியின் நடிப்பில் ஓ மை கோஸ்ட் என்ற படம் வெளியாகிறது. இது ஒரு நகைச்சுவை கலந்த ஹாரர் படமாகும்.