NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / பொழுதுபோக்கு செய்தி / ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு 
    ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு

    ரசிகனாக மாறிய நடிகர் விஜய் - புகைப்படம் வெளியிட்ட வெங்கட் பிரபு 

    எழுதியவர் Nivetha P
    Sep 02, 2023
    12:18 pm

    செய்தி முன்னோட்டம்

    நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ'திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்க்ஷன் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில் விஜய் தனது அடுத்த படமான 'தளபதி-68'ஐ வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் நடிக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

    இதனிடையே தற்போது விஜய் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அவருடன் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தினரான அர்ச்சனா கல்பாத்தி மற்றும் வெங்கட் பிரபு ஆகியோரும் உடன் சென்றுள்ளார்கள் என்று தெரிகிறது.

    அங்கு இப்படத்தின் முதற்கட்ட VFX பணிகள் முதன்மையான நிறுவனமான 'University of Southern California-Institute of Creative Technologies'ல் நடக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    வெங்கட் பிரபு 

     'Equalizer 3' படத்தினை திரையரங்கில் காண சென்ற நடிகர் விஜய் 

    அதன்படி அந்த நிறுவனத்தில் நடிகர் விஜய்க்கு பாடி ஸ்கேனிங், 3D-மாடலிங் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்படுகிறது.

    அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள இந்நிறுவனம், முன்னதாக ரெடி-பிளேயர், அவதார், ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ், போன்ற பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளது என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதனிடையே, நடிகர் விஜய் ஹாலிவுட் நடிகர் டென்சன் வாஷிங்டன் படமான 'Equalizer 3' என்னும் படத்தினை அமெரிக்கா திரையரங்கில் காணச்சென்றுள்ளார்.

    அப்போது திரையில் டென்சன் வாஷிங்டன் தோன்றியவுடன் முழுக்கமுழுக்க ரசிகராக மாறிய விஜய் ஆர்ப்பரித்த தருணத்தினை புகைப்படம் எடுத்து வெங்கட் பிரபு ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    மேலும் அதில் அவர், "முதன்முறையாக நமது தளபதி ஓர் ரசிகராக மாறிய தருணத்தினை நான் புகைப்படம் எடுத்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விஜய்
    அமெரிக்கா

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    விஜய்

    'பாண்டியம்மா' இந்திரஜா 'ரோபோ' ஷங்கருக்கு திருமணம்! நடிகர் விஜய்
    LCUவில் இணைய போகிறதா லியோ? கமல் குரலில் வெளியாகப்போகும் லியோ கிலிம்ப்ஸ் நடிகர் விஜய்
    லியோ படத்தின் அப்டேட் - சிறப்பு தோற்றத்தில் அனிருத்  அனிருத்
    விஜய் வீட்டிற்கு அருகிலேயே வீடு வாங்கிய கோலிவுட் நட்சத்திரங்கள் யார் தெரியுமா? நடிகர் விஜய்

    அமெரிக்கா

    மொபைல் குறுஞ்செய்தி சேவையில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டைக் கண்டறிந்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவர்கள் ஸ்மார்ட்போன்
    ட்விட்டர் (X) தலைமையகக் கட்டிடத்தின் மீது வைக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய 'X' லோகோ ட்விட்டர்
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  டொனால்ட் டிரம்ப்
    அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் நகரில் பதட்டம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025