Page Loader
பிரபல யூடியூபர் மதன் கௌரி ஹீரோவாகிறாரா?
மதன் கௌரியின் புகைப்படம்

பிரபல யூடியூபர் மதன் கௌரி ஹீரோவாகிறாரா?

எழுதியவர் Saranya Shankar
Jan 03, 2023
12:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் மிக பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் மதன் கௌரி ஆவார். சுமார் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவரின் வீடியோக்கள் அனைத்தும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்படும். இவர் தனது பக்கத்தில் தினமும் ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் முதன்முறையாக நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தினை ஒரு கல்லூரியின் கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான நந்தா பெரியசாமி இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஆனந்தம் விளையாடும் வீடு, மாத்தி யோசி போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேடி தேடி பாத்தேன்

மதன் கௌரி படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்

இவர் தற்போது யூடியூபர் மதன் கௌரியை நாயகனாக வைத்து ஒரு படத்தை இயக்கி கொண்டு வருகிறார். இந்த படத்திற்கு 'தேடி தேடி பாத்தேன்' என பெரியரிடப்பட்டுள்ளது. மதன் கௌரிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீரிதா ராவ் நடிக்கின்றார். இந்த படத்தினை வி.மதியழகன் தயாரித்துள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் தாரன் குமார் ஆவார். கே.ஏ.சக்தி வேல் அவர்கள் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் படத்தின் பாடல்களை கு. கார்த்திக் அவர்கள் எழுதி உள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என திரைப்பட குழு தகவல் தெரிவித்துள்ளது.