
வில்லேஜ் ஃபூட் பேக்டரி சேனலின் பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டது; ஆபாச புகைப்படங்கள் பதிவேற்றியதால் அதிர்ச்சி
செய்தி முன்னோட்டம்
யூட்யூபில் மிகவும் பிரபலமான சேனல் 'வில்லேஜ் ஃபூட் பேக்டரி'. அவர்களுடைய அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்துள்ளனர் அக்குழுவினர்.
வில்லேஜ் ஃபூட் பேக்டரி, யூடியூபில் பல மில்லியன் சந்தாதாரர்களையும், ஃபாலோவர்ஸ்களையும் கொண்டிருக்கிறது.
அதுமட்டுமின்றி, யூடியூபின் மூலம் கிடைத்த பிரபலத்தால், மதுரை, புதுச்சேரி ஆகிய ஊர்களில் தனியாக உணவகமும் துவங்கியுள்ளதாக கேள்வி.
இந்த சூழலில் Village Food Factory பேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அக்குழுவினர் "யாரோ தெரியாத நபர்களால் கணக்கில் அருவருக்க தக்க புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன. எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் ஸ்டோரி ஆக பதிவிடப்படுகின்றது.facebook நிறுவனத்திடம் சம்பந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும் நன்றி." என்று குறிப்பிட்டுள்ளனர்.
embed
Twitter Post
Village Food Factory-யின் முகநூல் பக்கத்தை ஹேக் - குழுவினர் விளக்கம்#TamilPatrica #VillageFoodFactory #Hack #Facebook #TamilNews #NewsUpdate pic.twitter.com/lOinHiFToE— Tamil Patrica (@tamilpatrica) March 6, 2024