Page Loader
'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர் 
தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் படத்தின் இயக்குனருக்கு விருது வழங்கிய சார்லஸ் மன்னர் மற்றும் ராணி கமிலா

'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படத்திற்கு விருது வழங்கினார் பிரிட்டன் மன்னர் 

எழுதியவர் Nivetha P
Jul 01, 2023
07:30 pm

செய்தி முன்னோட்டம்

நீலகிரி மாவட்டம் முதுமலை பகுதியில் யானைகளை பராமரிக்கும் தம்பதியான பொம்மன், பொம்மி ஆகியோரின் கதையினை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'. இந்த ஆவணப்படமானது இந்தாண்டு ஆஸ்கார் விருது பெற்றது. தாய் யானையினை பிரிந்த குட்டி யானைகளை பராமரிக்கும் பணியினை இந்த பொம்மன் பொம்மி தம்பதி செய்து வருவதாக கூறப்படுகிறது. யானைகளுக்கும், இவர்களுக்குள்ளும் இடையே உருவாகும் ஒரு உணர்வுபூர்வமான கதையினை எடுத்து காட்டியது இந்த ஆவணப்படம். கார்த்தி கொன்சால்வ்ஸ் இயக்கிய இப்படத்தினை குனீத்மோங்கா தயாரித்துள்ளார். நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம், பொம்மன் பொம்மி தம்பதியர் யானைகள் மீது கொண்டுள்ள நிபந்தனையற்ற அன்பு காரணமாகவே இப்படியொரு மாபெரும் வெற்றியினை பெற்றது என்றால் அது மிகையாகாது.

விருது 

அகாடமி விருதினை பெற்ற ஆவணப்படம் 

இந்நிலையில், தற்போது இப்படத்தின் இயக்குனர் கார்த்தி கொன்சால்வ்ஸ் அவர்களுக்கு 'என்விரான்மென்டல்' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவர், மூன்றாம் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் கையால் பெற்றுள்ளார். உணர்ச்சிமிக்க இப்படியொரு ஆவணப்படத்தினை எடுக்க அசாதாரண திறமை வேண்டும். அத்தகைய திறமை இவரிடம் உள்ளது என்று பரவலாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் 2023ம் வருடத்திற்கான சிறந்த ஆவண குறும்படம் என்பதற்கான அகாடமி விருதினையும் பெற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தொடர்ந்து, 'மார்க் ஷாண்ட்' என்னும் விருதும் யானைகளை பாதுகாக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் இப்படத்திற்கு அர்பணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.