Loading...
எம்மி விருதுகள் 2026 வெற்றியாளர்கள் முழுப் பட்டியல்: 'Widow's Bay', 'The Pitt' தொடர்கள் அபார வெற்றி
2026-ஆம் ஆண்டின் பிரைம்டைம் Emmy Awards விழா திங்கட்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது

எம்மி விருதுகள் 2026 வெற்றியாளர்கள் முழுப் பட்டியல்: 'Widow's Bay', 'The Pitt' தொடர்கள் அபார வெற்றி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
01:44 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச அளவில் சின்னத்திரையின் மிக உயரிய விருதாக கருதப்படும் 2026-ஆம் ஆண்டின் பிரைம்டைம் Emmy Awards விழா திங்கட்கிழமை இரவு விமரிசையாக நடைபெற்றது. இதில் 'Widow's Bay', 'The Pitt', 'Hacks' மற்றும் 'Pluribus' ஆகிய தொடர்கள் பெரும்பாலான முக்கிய விருதுகளைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தியுள்ளன. இந்த ஆண்டின் சிறந்த நாடக தொடருக்கான விருதை 'The Pitt' தொடர் வென்றது. அதேபோல, சிறந்த நகைச்சுவைத் தொடருக்கான விருதை 14 விருதுகளுடன் Widow's Bay தொடர் தட்டிச் சென்றது. நாடகத் தொடர் பிரிவில் சிறந்த முதன்மை நடிகராக 'தி பிட்' தொடரில் நடித்த நோவா வைலி தேர்வு செய்யப்பட்டார். சிறந்த முதன்மை நடிகையாக 'ப்ளூரிபஸ்' தொடரில் நடித்த ரியா சீஹார்ன் விருதை வென்றார்.

வெற்றியாளர்கள்

லிமிடெட் சீரிஸ் மற்றும் நகைச்சுவைப் பிரிவு வெற்றியாளர்கள்

லிமிடெட் அல்லது ஆந்தாலாஜி தொடர் பிரிவில் 'டிடிஎஃப் செயிண்ட் லூயிஸ்' தொடர் சிறந்த தொடராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

'தி பீஸ்ட் இன் மீ' தொடருக்காக மேத்யூ ரைஸ் சிறந்த முதன்மை நடிகராகவும், 'ரிமார்க்கப்ளி பிரைட் கிரியேச்சர்ஸ்' தொடருக்காக சாலி ஃபீல்ட் சிறந்த முதன்மை நடிகையாகவும் விருதுகளை பெற்றனர்.

நகைச்சுவை பிரிவில் 'ஹேக்ஸ்' தொடரில் நடித்த ஜீன் ஸ்மார்ட் சிறந்த முதன்மை நடிகை விருதை வென்று தனது 5-வது எம்மி விருதைச் பதிவு செய்தார்.

'விடோஸ் பே' தொடரில் நடித்த கேட் ஓ ஃபிளின் சிறந்த துணை நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரியாலிட்டி ஷோ

பிற முக்கிய விருதுகள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள்

சிறந்த ரியாலிட்டி போட்டி தொடருக்கான விருதை 'தி டிரைட்டர்ஸ்' தட்டிச் சென்றது.

'தி லேட் ஷோ வித் ஸ்டீபன் கோல்பெர்ட்' நிகழ்ச்சிக்கு வெரைட்டி தொடருக்கான சிறந்த திரைக்கதை விருது கிடைத்தது.

நாடகத் தொடர் பிரிவில் சிறந்த துணை நடிகராக 'டாஸ்க்' தொடரின் டாம் பெல்ஃப்ரி மற்றும் சிறந்த துணை நடிகையாக 'தி டிப்ளமேட்' தொடரின் அலிசன் ஜானி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ADVERTISEMENT