ஹைதராபாத் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு: சமந்தா, விஜய் தேவரகொண்டா, லக்ஷ்மனுக்கு நோட்டீஸ்
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத்தில் வசிக்கும் முன்னணி திரைப்பட நட்சத்திரங்களான சமந்தா ரூத் பிரபு, விஜய் தேவரகொண்டா, இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்ஷ்மன் உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் மேற்கொண்டு வரும் 'சிறப்பு தீவிர திருத்தப் பணி' (SIR) நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
நோட்டீஸ்
நோட்டீஸ் பெற்ற பிற பிரபலங்கள்
நடிகர் மகேஷ் பாபு - நம்ரதா தம்பதி, நடிகர் வெங்கடேஷ் டகுபதி மற்றும் அவரது மகள்கள், ஆனந்த் தேவரகொண்டா, விளையாட்டு நட்சத்திரங்களான சாய்னா நேவால், மிதாலி ராஜ், புல்லேலா கோபிசந்த், தொழிலதிபர் முரளி கிருஷ்ண பிரசாத் திவி மற்றும் ராம் சரணின் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வாக்காளர் அட்டையில் உள்ள பெயர் அல்லது பெற்றோரின் பெயரில் உள்ள எழுத்துப் பிழைகள் போன்ற காரணங்களுக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
2002-ஆம் ஆண்டின் பழைய SIR வாக்காளர் பட்டியல் தரவுகளுடன் தற்போதைய தகவல்கள் சரியாகப் பொருந்தாமல் (Unmapped) இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
விளக்கம்
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
நோட்டீஸ் பெற்றவர்கள் நேரில் ஆஜராகி தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து திருத்தங்களைச் செய்து கொள்ளலாம் அல்லது தங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அதிகாரப்பூர்வமாக அனுப்பிச் சரிபார்க்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நோட்டீஸ் அனுப்பப்பட்டதாலேயே ஒருவரது வாக்குரிமை ரத்து செய்யப்படாது என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
கர்நாடகாவிலும் இன்ஃபோசிஸ் நந்தன் நிலேகணி மற்றும் செரோதா நிறுவனர் நிதின் காமத் குடும்பத்தினருக்கும் இதேபோன்று நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.