Page Loader
லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை
லைகா நிறுவனத்தில் ED சோதனை

லைகா நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவினர் சோதனை

எழுதியவர் Venkatalakshmi V
May 16, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

கோலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா நிறுவனத்தை நிறுவியவர் சுபாஸ்கரன். பல பிரமாண்ட படங்களை தயாரித்த இந்த நிறுவனம், 'பிரிவோம் சந்திப்போம்' என்ற படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பில் இறங்கியது. 2.0 படத்திற்காக அதிக பொருட்செலவு அடங்கிய படத்தயாரிப்புகளையும் செய்ய துவங்கியது இந்த நிறுவனம். தற்போது வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களையும், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தது லைகா நிறுவனம். படம் பல கோடிகளில் லாபம் பார்த்தது என செய்திகள் வந்ததை அடுத்து, தற்போது லைகா நிறுவனத்தின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக பணபரிமாற்றம் நிகழ்ந்ததாக புகார் வந்ததை அடுத்து இந்த சோதனை என செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

ED சோதனை