Page Loader
தலைவர் 170: ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்
ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்

தலைவர் 170: ரஜினி படத்தில் இணைந்த துஷாரா விஜயன்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 02, 2023
10:47 am

செய்தி முன்னோட்டம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், 'ஜெயிலர்' படத்தை தொடர்ந்து, அடுத்ததாக லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், 'தலைவர் 170 ' என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். TG ஞானவேல் இயக்கவுள்ள இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று முதல் படம் சார்ந்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளது அனிருத். 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்' திரைப்படங்களை தொடர்ந்து, ரஜினிகாந்த் உடன் அனிருத் இணையும் நான்காவது திரைப்படம் இது. இந்த நிலையில் படத்தின் ஹீரோயின்-ஐ இன்று வெளியிட்டுள்ளனர். அதன்படி 'தலைவர் 170' திரைப்படத்தில் துஷாரா விஜயன் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் 'சர்பட்டா பரம்பரை' மூலம் பிரபலமானவர். கடைசியாக அருள்நிதியுடன் 'கழுவேத்தி மூர்க்கன்' படத்தில் நடித்திருந்தார்.

ட்விட்டர் அஞ்சல்

தலைவர் 170