Page Loader
ஆஸ்கார் 2025: தொடர்ந்து இரண்டு விருதுகளை வென்றது Dune 2
தொடர்ந்து இரண்டு விருதுகளை வென்றது Dune 2

ஆஸ்கார் 2025: தொடர்ந்து இரண்டு விருதுகளை வென்றது Dune 2

எழுதியவர் Venkatalakshmi V
Mar 03, 2025
08:26 am

செய்தி முன்னோட்டம்

இயக்குனர் டேவிட் வில்லெனுவேவின் 'டூன்: பார்ட் டூ' திரைப்படம் அடுத்தடுத்து 2 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளது. 'டூன்: பார்ட் டூ' திரைப்படம் 97வது அகாடமி விருதுகளில் சிறந்த ஒலிக்கான ஆஸ்கார் விருதை வென்றது. தொடர்ந்து, இந்தப் படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸிற்கான (VFX) அகாடமி விருதையும் வென்றது. ஆஸ்கார் விருதுகளுக்கு முன்பே, டூன்: பார்ட் 2 திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸ் சொசைட்டி விருதுகளில் (VES) ஆதிக்கம் செலுத்தி, ஏழு பரிந்துரைகளையும் நான்கு வெற்றிகளையும் பெற்று, அதன் முன்னணி அந்தஸ்தை உறுதிப்படுத்தியது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விவரங்கள்

Dune 2 பற்றி சில தகவல்கள்

பிரேசிலில், இந்த திரைப்படம் பிப்ரவரி 29, 2024 அன்று திரையிடப்பட்டது. படம் வெளியானது முதல் திரையரங்குகள் நிரம்பியது மற்றும் சமூக ஊடகங்களில் அதிக பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற குறிப்பாக மணல் புழு காட்சிகள் மற்றும் காவிய பாலைவனப் போர்கள் ஆகியவை பிளாக்பஸ்டர் விஷுவல் எஃபெக்ட்களுக்கான தரத்தை உயர்த்தின. 190 மில்லியன் டாலர் பட்ஜெட் மற்றும் 711 மில்லியன் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலுடன், இந்த திரைப்படம் அதன் செலவுகளை ஈடுசெய்தது மட்டுமல்லாமல், முதல் பாகத்தில் பெற்ற தொழில்நுட்ப தரத்தையும் உறுதிப்படுத்தியது. இப்படத்தின் முதல் பாகம் 2022 இல் சிறந்த VFX உட்பட ஆறு ஆஸ்கார் விருதுகளை வென்றது.