நடிகர் துல்கர் சல்மான் பிறந்தநாள்: அவர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படங்கள்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான். மலையாள சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்போது பலராலும் விரும்பப்படும் நடிகராக வலம் வருகிறார் துல்கர். துல்கர் சல்மானின் பிறந்தநாளான இன்று, அவர் நடிப்பில் வெளியான சில சுவாரசியமான திரைப்படங்களின் பட்டியல் இதோ உங்களுக்காக: சார்லி: தமிழில் வெளியான 'மாறா' திரைப்படத்தின் ஒரிஜினல் இந்த சார்லி திரைப்படம். மலையாளத்தில் வெளியான இத்திரைப்படம், துல்கருக்கு மாநில விருதை பெற்றுத்தந்தது. அந்த திரைப்படம் மூலமாக ஒரு பாடகராகவும் உருவானார் துல்கர். பெங்களூரு டேஸ்: துறுதுறு இளைஞனாகவும், மருகும் காதலனாகவும் பல பரிமாணங்களை காட்டி இருப்பார் துல்கர். மலையாளத்தில் வெளியான இத்திரைப்படத்தில் நஸ்ரியா, பஹத் பாசில் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருந்தது.
பெண்களின் கனவுகண்ணனாக வலம் வரும் துல்கர்!
ஓகே கண்மணி: இயக்குனர் மணிரத்னமின் காதல் படைப்பு இத்திரைப்படம். இக்கால காதலை கண்முன்னே கொண்டு வந்தார். 'ஆதி' என்ற கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி இருந்தார் துல்கர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்: காதல், காமெடி என பல பரிமாணங்களை வெளிக்காட்டியது இத்திரைப்படம். இன்று வரை, தமிழ் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் இந்த திரைப்படமும் ஒன்று. குரூப்: பல மொழிகளில் வெளியான இத்திரைப்படம், அவருடைய லவ்வர் பாய் இமேஜை உடைத்து ஒரு நெகடிவ் ஹீரோவாக உருவெடுத்தார். வெளியான அனைத்து மொழிகளிலும் ஹிட்டானது இத்திரைப்படம். சீதா ராமம்: சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் நடைபெறும் ஒரு கதையில், ராணுவ வீரராக நடித்திருந்தார். இந்த திரைப்படம் மட்டுமின்றி, இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய ஹிட்.