Page Loader
அடடே... இயக்குனர் சுசீந்திரன் வில்லனா நடிக்கப்போறாரா...?
இயக்குனர் சுசீந்திரன் படத்துல வில்லனா நடிக்கப்போறாரா

அடடே... இயக்குனர் சுசீந்திரன் வில்லனா நடிக்கப்போறாரா...?

எழுதியவர் Arul Jothe
Jun 07, 2023
03:55 pm

செய்தி முன்னோட்டம்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா முதன் முறையாக 'மார்கழி திங்கள்' என்னும் படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார். மனோஜ் பாரதிராஜா, 1999ல் பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மகால்' படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு 'சமுத்திரம்','வருஷமெல்லாம் வசந்தம்', 'அல்லி அர்ஜுனா' போன்ற படங்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிம்புவின் 'மாநாடு' படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள திரைப்படம் தான் 'மார்கழி திங்கள்'. இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரிக்க போவதாகவும் கூறப்பட்டது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

Director Suseendran as villain in bharathiraja movie

வில்லனாகும் இயக்குனர்

இந்நிலையில், 'வெண்ணிலா கபடி குழு' , 'ஈஸ்வரன்' போன்ற படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் சுசீந்திரன், மனோஜ் பாரதிராஜா இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இவர் 'சுட்டு பிடிக்க உத்தரவு' என்ற திரைப்படத்தில், செல்வம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 'மார்கழி திங்கள்' திரைபடத்தை, சுசீந்திரனின், வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தான் வெளியிடவுள்ளது. நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஈஸ்வரன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். அதில் சுவாரசியமாக 'ஈஸ்வரன்' திரைபடத்தில், சிறுவயது பாரதிராஜாவாக மனோஜ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடதக்கது. 'மார்கழி திங்கள்' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.