Page Loader
ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்?
நண்பன் படத்தை தொடர்ந்து மீண்டும் ஷங்கர் -விஜய் கூட்டணி?

ஷங்கர் இயக்கத்தில் மீண்டும் விஜய்?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 12, 2023
11:50 am

செய்தி முன்னோட்டம்

நடிகர் விஜய்-இயக்குனர் ஷங்கர் இணைந்து உருவாக்கிய திரைப்படம் 'நண்பன்'. அது ஒரு ஹிந்தி படத்தில் ரீமேக். ஹிந்தியில் அமீர்கான், மாதவன் மற்றும் பலர் நடித்திருந்த அப்படத்தின் தமிழ் வடிவத்தில், விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா மற்றும் இலியானா நடித்திருந்தனர். பல கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே ஹிட். இருப்பினும், அப்படத்தில், ஷங்கரின் மாஜிக் டச் இல்லை என்ற குறை மட்டும் பலருக்கும் இருந்தது. தற்போது அந்த குறையை நிவர்த்தி செய்ய, விஜய்யுடன் மீண்டும் இணைய ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்-லைன் ஒன்றை விஜயிடம் ஷங்கர் தெரிவித்துள்ளதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிகிறது. 'இந்தியன் 2' படவேலைகள் முடிவடைந்ததும், திரைக்கதை உருவெடுக்கும் என ஷங்கர் குறிப்பிட்டதாக தெரிகிறது.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் விஜய்-இயக்குனர் ஷங்கர் இணையப்போவதாக தகவல்