விளம்பரத்தில் நடிக்க, ஹீரோக்களுக்கு நிகராக சம்பளம் வாங்கிய ராஜமௌலி
RRR திரைப்படம், ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதிலிருந்து, இயக்குனர் ராஜமௌலிக்கு மவுசு கூடிவிட்டது. அதற்கேற்றாற்போல, அவரது சம்பளத்தையும் அவர் உயர்த்தியுள்ளதாக தெரிகிறது. ஆஸ்கார் விழாவிற்கு சென்று வந்த கையோடு, அவரை தனது விளம்பர படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தது, ஒரு தனியார் மொபைல் நிறுவனம். அந்த விளம்பரத்தில் நடிக்க, அவருக்கு பேசப்பட்ட சம்பளம், 30 கோடி ஆகும். பெரும் நடிகர்கள் கூட இவ்வளவு சம்பளம் வாங்க யோசிக்கும் போது, இவருக்கு இவ்வளவு சம்பளமா என ஆச்சரியப்படுகின்றனர், விவரம் அறிந்தவர்கள். இந்த தனியார் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டிற்கு விளம்பரத்தூதராக செயல்படவும், அவர்களுக்கு ஒரு விளம்பரம் இயக்கி தரவும் இந்த சம்பளம் பேசப்பட்டுள்ளது. ராஜமௌலி, தற்போது மகேஷ் பாபுவை வைத்து ஒரு சூப்பர்மேன் கதையை இயக்கவுள்ளார்.