தமிழகத்தின் கட்டடக்கலை மற்றும் உணவை பற்றி இயக்குனர் ராஜமௌலி புகழாரம்
இந்தியா மட்டுமின்றி, ஆஸ்கார் விருது வரை சென்று, தற்போது உலகப்புகழ் அடைந்த இயக்குனர் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவின் தேடப்படும் இயக்குனர். 'நான் ஈ', மாவீரன், பாகுபலி கடைசியாக ஆர்.ஆர்.ஆர் என இவரின் படங்கள் அனைத்துமே ஃபேன்டசி நிறைந்து இருக்கும். இருப்பினும் நம்பத்தகுந்த வகையில், திரைக்கதை நேர்த்தியாக பின்னப்பட்டிருக்கும். சிறு வயதில் கேட்ட ராஜா கதைகள், இதிகாசங்கள் எல்லாம் தான், தன்னுடைய திரைக்கதையில் பிரதிபலிக்கிறது என கூறிய ராஜமௌலி, மஹாபாரத இதிகாசத்தை படமாக எடுப்பதுதான் தன்னுடைய கனவு என ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், RRR படத்திற்காக பல வெளிநாடுகளுக்கு சுற்றித்திரிந்த இவர், தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். அதில், நமது கோவில்களின் கட்டடக்கலையும், ருசியான உணவையும் பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளார்.