LOADING...
பெண்களுக்கு அட்வைஸ் செய்த மோகன்.ஜி; 'பூமர் ஜி' என்று கலாய்த்து தள்ளும் நெட்டிஸன்கள்
பெண்களுக்கு அட்வைஸ் சொல்லும் மோகன்.ஜி

பெண்களுக்கு அட்வைஸ் செய்த மோகன்.ஜி; 'பூமர் ஜி' என்று கலாய்த்து தள்ளும் நெட்டிஸன்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 13, 2023
07:07 pm

செய்தி முன்னோட்டம்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற சர்ச்சைக்குரிய படங்களை எடுத்தவர் மோகன்.ஜி. தற்போது அவர், செல்வராகவனை வைத்து பாகாசுரன் என்ற படத்தை இயக்கி வருகிறார். அதில், 'நட்டி' நடராஜன், ராதாரவி, ராஜன்.கே, சரவண சுப்பையா, மன்சூர் அலிகான், தேவதர்ஷினி, பி.எல்.தேனப்பன். கூல் சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், சேலத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய மோகன், "உங்களை அழகாக காட்டக் கூடிய புரொஃபைல் பிக்சர்களை வைக்காதீர்கள். அதுதான் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி. நீங்கள் டார்க்கெட் செய்யப்படுவது அந்த இடத்திலிருந்து தான்" எனக்கூறியுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆனதை அடுத்து, அவரை 'பூமர் ஜி' என்று கலாய்த்து வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

மோகனின் சர்ச்சைக்குரிய பேச்சை கலாய்க்கும் நெட்டிஸன்கள்