
இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன் காலமானார்
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் லிங்குசாமியின் அண்ணனும், திருப்பதி ப்ரதர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகியுமான கேசவன், இன்று காலமானார். அவருக்கு வயது 60.
கேசவன், இயக்குனர் லிங்குசாமியின் இரண்டாவது அண்ணன்.
ஆரம்பகாலத்தில், அவர்களின் சொந்த ஊரான கும்பகோணம் அருகே உள்ள குடவாசலில் மாளிகை கடை வியாபாரம் நடத்தி வந்தவர், தம்பிக்கு ஆதரவாக சென்னைக்கு வந்து அவரது தயாரிப்பு நிறுவனமான 'திருப்பதி ப்ரதர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாகங்களை மேற்பார்வை செய்துவந்தார்.
இந்நிலையில், இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.
அவரது மகன், வினோத், 'கோலி சோடா 2' படத்தில் மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு அவர் ரிலீசிற்கு தயாராகவுள்ள, லிங்குசாமி தயாரிபில் உருவான 'நான் தான் சிவா' என்ற படத்தின் நாயகனாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
இயக்குனர் லிங்குசாமியின் அண்ணன் கேசவன்
Deep condolences:
— FridayCinema (@FridayCinemaOrg) February 27, 2024
Producer - Director #lingusamy ‘s
Brother #NRadhkrishnan passed away., @ThirrupathiBros pic.twitter.com/BuHQyolsxC