அடுத்த ஆண்டு ரஜினி பிறந்தநாளுக்கு ரீரிலீஸ் ஆகும் படையப்பா- கேஎஸ் ரவிக்குமார் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அடுத்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் அன்று, படையப்பா திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்படும் என அப்படத்தின் இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான அவரின் முத்து திரைப்படம் ரீரிலீஸ் செய்யப்பட்டது.
ரோகிணி திரையரங்கில் இப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை, படத்தின் இயக்குனர் ரவிக்குமார், நடிகை மீனா ஆகியோர் ரசிகர்களுடன் கண்டு களித்தனர். பின்னர் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், ரஜினிகாந்தின் அடுத்த பிறந்தநாளுக்கு படையப்பா திரைப்படம் ரீ ரலீஸ் செய்யப்படும் என என்ற அறிவிப்பை வெளியிட்டார். இன்று ரஜினிகாந்தின் முத்து திரைப்படத்துடன், கமலின் ஆளவந்தான் திரைப்படமும் ரீ ரிலீஸ் ஆனது.
ட்விட்டர் அஞ்சல்
படையப்பா ரீ ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிடும் ரவிக்குமார்
Next #Padaiyappa Re-release ✅
— Sekar 𝕏 (@itzSekar) December 8, 2023
12/12/2024
Officially Confirmed By Directer #KSRavikumar in #MuthuReRelease
at rohini theatre 💥#Rajinikanth #MuthuMovie pic.twitter.com/Ro26i5rgpT