Page Loader
வணங்கான் ஷூட்டிங்கில் ஹீரோயினை அடித்தாரா இயக்குனர் பாலா?
இயக்குனர் பாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு, சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது

வணங்கான் ஷூட்டிங்கில் ஹீரோயினை அடித்தாரா இயக்குனர் பாலா?

எழுதியவர் Venkatalakshmi V
Feb 28, 2024
11:52 am

செய்தி முன்னோட்டம்

'வணங்கான்' படப்பிடிப்பு தளத்தில், இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக மலையாள நடிகை மமிதா பைஜு குற்றம் சாட்டியுள்ளார். தனியார் சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் என பெயர் பெற்ற பாலா, 'வணங்கான்' படத்தின் ஷூட்டிங்கின் போது தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இயக்குனர் பாலா, கடந்த 2022 ஆம் ஆண்டு, சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' படத்தை எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே, கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த படத்தில் கமிட் ஆனவர் தான் மமிதா பைஜு. ஆனால் அவரும், சூர்யாவை போலவே படத்தின் ஆரம்பத்திலேயே விலகிவிட்டார்.

ட்விட்டர் அஞ்சல்

ஹீரோயினை அடித்த இயக்குனர் பாலா