Page Loader
லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் 
லியோ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்

லியோ திரைப்படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் 

எழுதியவர் Venkatalakshmi V
Jul 04, 2023
01:55 pm

செய்தி முன்னோட்டம்

லோகேஷ் கனகராஜ் - விஜய் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இந்த திரைப்படத்தில், திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என பலரும் நடிக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தில் நயன்தாராவிற்கு எதிரான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். பல பாலிவுட் படங்களை இயக்கியுள்ள இவர், ஏற்கனவே ஒரு பேட்டியின் போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். அவரது ஆசையை நிறைவேற்றும் விதமாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அனுராக் இணைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றது.

ட்விட்டர் அஞ்சல்

லோகேஷ் திரைப்படத்தில் நடிக்க ஆசைப்பட்ட அனுராக்