சமூக வலைத்தளத்தில் இருந்து வெளியேறிய இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்
நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதனை தொடர்ந்து, மீண்டும் நிவின் பாலி உடன் இணைந்து இவர் இயக்கிய மலையாள திரைப்படமான 'பிரேமம்' மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இந்தியா முழுவதிலும், அனைத்து மொழி ரசிகர்களாலும் ரசிக்கப்பட்டது. இப்படத்தின் மூலமாகவே, சாய் பல்லவி, மடோனா செபஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ஹீரோயினாக அறிமுகம் ஆயினர். தொடர்ந்து, 7 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு, நயன்தாரா, பிரித்விராஜ் உடன் கோல்ட் என்ற படத்தை இயக்கினார். தற்போது கிஃப்ட் என்கிற படத்தை இயக்கி வரும் அல்போன்ஸ், இதுவே தன்னுடைய கடைசி படம் என்பதையும் தெரிவித்தார்.
ஆட்டிஸம் நோயால் பாதிப்பு
இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்னர், தனக்கு ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிசார்டர் என்கிற அரியவகை நோய் பாதிப்பு உள்ளதாக அறிவித்தார். அதனால், இனி படங்கள் எதுவும் இயக்கப்போவதில்லை எனவும் கூறி ரசிகர்களை மட்டுமின்றி திரையுலகத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்தார். இந்த நிலையில் தான், சமூக வலைத்தளத்தில் இருந்து விலக உள்ளதாக அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூலில் இனி நான் எந்த ஒரு பதிவும் பதிவிட போவதில்லை. காரணம் என்னவென்றால் நான் சோசியல் மீடியாவில் பதிவிடும் பதிவுகள் என் அப்பா, அம்மா, என்னுடைய சகோதரிக்கு பிடிக்கவில்லை. என் உறவினர்கள் அவர்களை பயமுறுத்துகிறார்கள். நான் அமைதியாக இருந்தால் எல்லோருக்கும் நிம்மதி என நினைக்கிறேன். அப்படியே இருக்கட்டும்" என தெரிவித்துள்ளார்.
Twitter Post
#AlphonsePuthren pic.twitter.com/xx6kPPkDJi— Mollywood BoxOffice (@MollywoodBo1) January 17, 2024