மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்; வெளியான உண்மை தகவல்
பழம்பெரும் தமிழ் நடிகர் சிவக்குமார் ரசிகர் ஒருவர் பரிசளித்த சால்வையை தூக்கி எரியும் வீடியோ இணையத்தில் வெளியானதை அடுத்து அவரை இணையத்தில் கடுமையாக சாடினர். ஆனால், சிவகுமாருக்கும், அந்த ரசிகருக்கும் பல ஆண்டுகளாக நட்பு இருப்பதாக, அந்த ரசிகரின் குடும்ப உறுப்பினர் ஒரு பதிவில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், சிவக்குமார் சால்வையை எறிந்தது நட்புக்காகவே தவிர மற்றவர்கள் கூறுவது போல் அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். காரைக்குடியில் எழுத்தாளர் பழ.கருப்பையாவின் நூல் வெளியீட்டு விழாவில் சிவக்குமார் பங்கேற்றார். அந்த விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில், விழா மேடையேறிய ஒரு முதியவர், சிவக்குமாரிடம் சால்வையுடன் வருவதையும், அவர் அதை வீசுவது போன்ற சில காட்சிகளும் இதில் உள்ளன. இதுவே வைரலானது.
சர்ச்சையான வீடியோ
உண்மையில் நடந்தது என்ன?
வீடியோ வைரலான பிறகு, வீடியோவில் உள்ள முதியவர் தனது தாத்தா கரீம் என்று ரிஃபோய் ஜெய்னுலாபிதீன் என்பவர் தெரிவித்துள்ளார். தோடும் சிவகுமாரும், கரீமும் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறந்த நண்பர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,"நான் என் தாத்தாவிடம் பேசினேன். சிவகுமார் சால்வையை நட்பாக வீசியதாக அவர் கூறினார். பின்னர் படிக்கட்டுகளில் இருந்து இறங்கி என் தாத்தாவைச் சந்தித்து "வா..போகலாம்" என்று தெரிவித்துள்ளார் காரைக்குடியில் தான் சிவகுமாரின் நண்பர் கரீமும் வசிப்பதாக ரிஃபோய் குறிப்பிட்டார். மேலும், அவர்களது குடும்ப நிகழ்ச்சிகளில் பலவற்றிலும் சிவக்குமார் கலந்து கொண்டதாகவும் அவர் கூறி, அவருடைய தாத்தாவுடன், சிவகுமார் இருக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டார்.